ம.பி படகு விபத்து: பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு- மீட்புப்பணி நிறைவு

விபத்தில் 12வது உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டது.
ம.பி படகு விபத்து: பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு- மீட்புப்பணி நிறைவு
Published on

மத்தியபிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பார்கி அணையில் சுற்றுலா பயணிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நர்மதா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் சுற்றுலா படகில் 31 பேர் சென்றபோது கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

அணை நீரில் மூழ்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், தத்தளித்த 15 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி காணாமல்போன மேலும் சிலரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், இந்த விபத்தில் 12வது உடல் மீட்கப்பட்ட நிலையில் மேலும் ஒருவரின் உடலும் மீட்கப்பட்டது.

பேரிடர் மீட்புப்படையின் தேடுதலில் மேலும் இருவரது உடல்களும் கண்டெடுத்த நிலையில் பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து, பேரிடர் மீட்புப்படையின் தேடுதல் பணியும் நிறைவடைந்துள்ளது.

இதன்மூலம், தமிழ்நாட்டைச் சேர்ந்தோர் உள்ளிட்ட 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com