ஓமைக்ரானை விட 'ஓ மித்ரோன்' ஆபத்தானது- பிரதமர் மோடியை விமர்சித்த சசி தரூர்

பா.ஜ.க. ஆட்சியில் அரசியலமைப்பின் மீதான வெறுப்பு, மதவெறி தாக்குதல்கள் மற்றும் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை காண்கிறோம் என கூறினார்.
சசி தரூர், பிரதமர் மோடி
சசி தரூர், பிரதமர் மோடி
Published on

புது டெல்லி:

பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றும்போது அடிக்கடி ‘ஓ மித்ரோன்’(நண்பர்களே) என்ற வார்த்தையை பயன்படுத்துவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா வைரஸின் ஒமைக்ரானை விட ஓ மித்ரோன் ஆபத்தானது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பியுமான சசி தரூர் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து சசி தரூர் ட்விட்டரில் கூறியதாவது:-

ஓமைக்ரானை விட 'ஓ மித்ரோன்’ மிகவும் ஆபத்தானது.  பா.ஜ.க. ஆட்சியில் அரசியலமைப்பின் மீதான வெறுப்பு, மதவெறியின் தாக்குதல்கள் மற்றும் நமது ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்துதல் ஆகியவற்றை காண்கிறோம். 

சமூகத்திற்கு இடையேயான பிளவுபடுத்துதலை ஊக்குவிப்பதின் விளைவுகளை நாம் அளவிடுகிறோம். இந்த ஓ மித்ரோன் வைரசில் "லேசான மாறுபாடு" எதுவும் இல்லை.

இவ்வாறு சசிதரூர் பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com