வாடகை தர முடியாததால் மனைவியையும், மகளையும் பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளரை அனுமதித்த கணவன் | Gujarat

அங்கு ரூ.2,000 மாத வாடகையில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
வாடகை தர முடியாததால் மனைவியையும், மகளையும் பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளரை அனுமதித்த  கணவன் | Gujarat
Published on

குஜராத்தின் சுரேந்திரநகரைச் சேர்ந்த ஒரு குடும்பம், பிழைப்பு தேடி ஆறு மாதங்களுக்கு முன்பு மோர்பி பகுதிக்குக் குடிபெயர்ந்தது.

அங்கு ரூ.2,000 மாத வாடகையில் ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ஆனால், பண நெருக்கடி காரணமாகக் கடந்த நான்கு மாதங்களாக அவர்களால் வீட்டு வாடகையைச் செலுத்த முடியவில்லை.

வாடகை நிலுவைத்தொகை சேர்ந்துகொண்டே போனதால், அந்தப் பெண்ணின் கணவன் வீட்டு உரிமையாளருடன் ஒப்பந்தத்தை செய்த்துள்ளான்.

வாடகை பாக்கிக்கு ஈடாக, தனது மனைவி மற்றும் மைனர் மகளை பாலியல் வன்கொடுமை செய்ய வீட்டு உரிமையாளருக்கு அவன் அனுமதி அளித்துள்ளான்.

இதைத்தொடர்ந்து வீட்டு உரிமையாளர் பெண்ணையும், மைனர் சிறுமியையும் பாலியல் வன்கொடுமை செய்தாள்ளான்.

இந்தக் கொடூரம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயாருக்குத் தெரியவர, அவர் உடனடியாக மோர்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில், போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவன் மற்றும் வீட்டு உரிமையாளர் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.

மேலும், இந்தத் செயலில் தொடர்புடைய மூன்றாவது நபர் ஒருவரையும் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com