எரிபொருள் சிக்கனம்: தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைக்க பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!

ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான உரங்களை நோக்கி செல்லவேண்டுமென கோரினார்.
எரிபொருள் சிக்கனம்: தனது பாதுகாப்பு வாகனங்களை 50% குறைக்க பிரதமர் மோடி அதிரடி உத்தரவு!
Published on

கடந்த 10 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், நாட்டின் பொருளாதாரத்தை கருதியும், பாதுகாப்பை கருதியும் பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்கு சில வேண்டுகோள்களை விடுத்தார்.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் சூழல் நிலவிவருவதால், பெட்ரோல், டீசல் மற்றும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. ஆதலால் நாம் அதை பொறுத்து நடந்துகொள்ளவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

முன்னுதாரணமாக தனது அதிகாரபூர்வ பாதுகாப்பு வாகன எண்ணிக்கையை 50 சதவீதம் குறைக்க சிறப்பு பாதுக்காப்பு படைக்கு உத்தரவிட்டார்.

பாதுகாப்பு அணிவகுப்பில் எரிபொருளால் இயங்கும் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா காலத்தில் இருந்ததை போல பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சமையல் எண்ணெய் அதிகரிப்பை குறைக்கும்மாறும், விவசாய துறையில் ரசாயன உரங்களை குறைத்து இயற்கையான உரங்களை நோக்கி செல்லவேண்டுமென கோரினார்.

இதுபோன்ற மாற்றங்கள் ஏற்பட்டாலும் கட்டாய பாதுகாப்பில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவித்தார்.

பிரதமரின் பாதுகாப்புக்கான புளூ புக் விதிமுறைகளில், பொதுவாக பாதுகாப்பு விதிமுறைகளை மாற்றும்போது புதிய அதிநவீன கார்கள் வாங்குவது வழக்கம்.

ஆனால், இந்த மாற்றத்திற்காகத் மத்திய அரசுப் பணத்தில் இருந்து புதிய மின்சார வாகனங்களை வாங்கக் கூடாது, இருப்பில் உள்ள வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com