

இந்தியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று சமூக வலைதளத்தில் டிரம்ப் அனுப்பிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், "இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் மேலும் வலுப்பெறும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடிக்கும் தலைவர்கள். இந்தத் தகுதி பலருக்கு இருப்பதில்லை " என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பதிவு வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவி வரும் சூழலில் தூதரகத்தின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.
இதற்கிடையே ஈரான்- இஸ்ரேல், அமெரிக்கா இடையிலான போரில் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.