இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்

இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று நடைபெறுகிறது.இதில் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று ஆலோசனை கூட்டம்
Published on

புதுடெல்லி:

காங்கிரஸ் பொதுச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கேசி வேணுகோபால், இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, கேசி வேணுகோபால் எக்ஸ் வலைதளத்தில் வெள்யிட்டுள்ள செய்தியில், நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிக்க, இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் ஜூலை 19, 2025 அன்று மாலை 7 மணிக்கு ஆன்லைனில் நடைபெறும் என பதிவிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர் குறித்த டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர்கள் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்தும், பாராளுமன்றத்தில் ஓரணியில் செயல்படுவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன.

இதற்கிடையே, தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருந்து ஆம் ஆத்மி கட்சி வெளியேறுவதாக அக்கட்சியின் தேசிய தலைமை ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சி கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com