ஐஸ்க்ரீம் விற்பனையாளரை நடுரோட்டில் கழுத்தறுத்து கொன்ற நபர்.. தலையை துண்டித்து வீட்டுக்கு எடுத்துச் சென்ற பயங்கரம் | UP

தகவலறிந்து போலீசார் சென்று பார்த்தபோது அருகில் தலையை வைத்துவிட்டு சங்கர் யாதவ் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ஐஸ்க்ரீம் விற்பனையாளரை நடுரோட்டில் கழுத்தறுத்து கொன்ற நபர்.. தலையை துண்டித்து வீட்டுக்கு எடுத்துச் சென்ற பயங்கரம் | UP
Published on

உத்தரப் பிரதேசத்தில் ஐஸ்கிரீம் விற்பனை செய்வது தொடர்பான தகராறில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாராபங்கி மாவட்டம் பாரா பெஹதா கிராமத்தைச் சேர்ந்த பப்லு (25) என்ற இளைஞர், தனது கிராமத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலுள்ள பகுதிக்கு நேற்று(சனிக்கிழமை) ஐஸ்கிரீம் விற்கச் சென்றுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த சங்கர் யாதவ் (50) என்பவருக்கும் இடையே ஐஸ்கிரீம் விற்பனை செய்வது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பப்லு அங்கிருந்து நகர மறுத்ததால் ஆத்திரமடைந்த சங்கர் யாதவ், அரிவாளால் நடுரோட்டிலேயே பப்லுவின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார்.

கொலை செய்ததோடு நில்லாமல், துண்டிக்கப்பட்ட பப்லுவின் தலையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

தகவலறிந்து போலீசார் சென்று பார்த்தபோது அருகில் தலையை வைத்துவிட்டு சங்கர் யாதவ் சமையல் செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் தலையை எரிக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

சங்கர் யாதவைக் கைது செய்த போலீசார் பாதி எரிந்த நிலையில் பப்லுவின் தலையை மீட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com