முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாத மம்தா... சட்டமன்றத்தை கலைத்த ஆர்.என்.ரவி!

மேற்குவங்கத்தில் புதிய அரசு அமையவுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை கலைத்தார்.
மேற்குவங்க சட்டமன்றம் கலைப்பு... முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யாத மம்தா!
Published on

மேற்குவங்கத்தில் ஏப்.23, 29 என இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.க 207 இடங்களையும், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 80 தொகுதிகளையும் கைப்பற்றியது. இதன்மூலம் முதல்முறையாக மேற்குவங்கத்தில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக.

பாஜகவின் இந்த வெற்றி மோடி, அமித்ஷா மற்றும் மற்றும் தேர்தல் ஆணையத்தில் கூட்டு சதி எனவும், தான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனவும், அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்து வருகிறார். மேலும் முதலமைச்சர் பதவியையும் தற்போதுவரை ராஜினாமா செய்யவில்லை.

இதனிடையே தற்போதைய 17-வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று அம்மாநிலத்தின் ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தை முறைப்படி கலைத்துள்ளார்.

புதிய அரசு அமைப்பதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பானர்ஜி தானாகவே அதிகாரம் இழந்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com