Mamata Banerjee | அவருக்கும், அவரது அரசுக்கும் வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன் - முதலமைச்சர் விஜய்-க்கு மம்தா பேனர்ஜி வாழ்த்து

அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.
Mamata Banerjee | அவருக்கும், அவரது அரசுக்கும் வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன் - முதலமைச்சர் விஜய்-க்கு மம்தா பேனர்ஜி வாழ்த்து
Published on

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள விஜய்-க்கு மேற்கு வங்க மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் மம்தா பேனர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய்-க்கும், அவரது அரசுக்கும் வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மம்தா பேனர்ஜி எக்ஸ் தள பதிவில், "2026-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 'தமிழக வெற்றிக் கழகம்' (TVK) ஈட்டியிருக்கும் மகத்தான வெற்றிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு. விஜய் அவர்களுக்கு எனது அன்பார்ந்த நல்வாழ்த்துகளையும் உரித்தாக்குகிறேன்.

இந்த தேர்தல் தீர்ப்பானது, தமிழ்நாட்டு மக்களின் விருப்பங்களையும், நம்பிக்கையையும், ஜனநாயக உணர்வையும் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. அவரது தலைமையின் கீழ், தமிழ்நாடு தனது முன்னேற்றம், மக்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி பயணத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

மக்களுக்கு அர்ப்பணிப்புடனும் கடமையுணர்வுடனும் சேவையாற்றுவதில், அவருக்கும் அவரது அரசுக்கும் வெற்றி கிட்ட வாழ்த்துகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com