பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்: தேர்தல் அறிக்கை வெளியிட்டு மம்தா பானர்ஜி வாக்குறுதி

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் என மம்தா பானர்ஜி வாக்குறுதி அளித்துள்ளார்
பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய்: தேர்தல் அறிக்கை வெளியிட்டு மம்தா பானர்ஜி வாக்குறுதி
Published on

மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் 10 முக்கிய வாக்குறுதிகள் இடம் பிடித்துள்ளன.

அதில்

* பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும். வருடத்திற்கு 18 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். எஸ்சி./எஸ்.டி. பெண்களுக்கு மாதந்தோறும் 1700 ரூபாய் வழங்கப்படும். வருடத்திற்கு 20,400 ரூபாய் கிடைக்கும். லக்ஷ்மிர் பந்தர் திட்டத்தின் கீழ் இது வழங்கப்படும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

* வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் வழங்கப்படும் திட்டம் நீட்டிக்கப்படும்.

* 30 ஆயிரம் கோடி ரூபாயில் வேளாண் பட்ஜெட் உருவாக்கப்படும்.

* மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் கான்கிரீட் வீடு கட்டி கொடுக்கப்படும்.

* ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலம் குடிநீர் வசதி.

ஆகியவை முக்கிய வாக்குறுதிகள் ஆகும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com