பல்வேறு பிரிவினரிடையே மோதலை தூண்டி நாட்டை சூறையாட விரும்பும் பாஜக: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜக சமுதாயத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் சண்டையைத் தூண்டி வருகிறது. இத்தகைய மோதல்களிலிருந்து உருவாகும் சூழலை பயன்படுத்திக்கொண்டு, அது நாட்டைக் கொள்ளையடிக்க விரும்புகிறது என மம்தா பானர்ஜி குற்றம்சாட்டினார்
பல்வேறு பிரிவினரிடையே மோதலை தூண்டி நாட்டை சூறையாட விரும்பும் பாஜக: மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு
Published on

மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பெல்டா பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார பேரணியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கலவரங்களைத் தூண்டிவிட்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா ஆகியோர் மீதுதான் முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். பாஜக சமுதாயத்தின் அனைத்து பிரிவினரிடையேயும் சண்டையைத் தூண்டி வருகிறது. இத்தகைய மோதல்களிலிருந்து உருவாகும் சூழலை பயன்படுத்திக்கொண்டு, அது நாட்டைக் கொள்ளையடிக்க விரும்புகிறது.

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் முதல் நிர்வாக மற்றும் காவல்துறை சர்வீசஸ் வரை அனைவரையும் பிளவுபடுத்த பாஜக முயல்கிறது. சிவல் சர்வீஸ் உறுப்பினர்கள் உட்பட மிகச் சிறப்பாகப் பணியாற்றி வந்த பல அரசு அதிகாரிகள் தற்போது அவமதிக்கப்பட்டுள்ளனர்.

பாஜக-வின் வலியுறுத்தலின் பேரில், தேர்தல் ஆணையம் பல மூத்த அதிகாரிகளைத் தேர்தல் நடைபெறவுள்ள பிற மாநிலங்களுக்கு தன்னிச்சையாக இடமாற்றம் செய்துள்ளது. இது மிகப்பெரிய அளவிலான அரசியல் தலையீடு.

இவ்வாறு மம்தா பானர்ஜி பாஜக மீது குற்றம்சாட்டியுள்ளார்.

மம்தா பானர்ஜிக்கு எதிராக அரசியல் குற்றப்பத்திரிகை என அமித் ஷா குற்றம்சாட்டிய நிலையில், பிரதமர் மோடி மற்றும் அமித் ஷாவை கடுமையாக சாடியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com