

எண்ணெய் நிறுவனங்கள் இன்று திடீரென வணிக சிலிண்டரின் விலையை அதிரடியாக உயர்த்துள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 993 ரூபாய் உயர்ந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது:-
பிரதமர் மோடி பணவீச்சம் பற்றி பேசும்போது, விலைவாசி அதிகரிக்காது என்பதை தொடர்ந்து கூறி வருகிறார். இன்று, நான் யதார்த்தத்தை பார்க்கும்போது, அவர் என்ன சொன்னாரோ, அதை அவரால் செய்ய முடியவில்லை என்பதை பார்க்க முடிகிறது.
பொதுமக்களின் கருத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நாட்டை இதுபோன்ற கடினமான சூழ்நிலைக்கு கொண்டு வந்த நிலையிலும், மக்கள் இன்னும் அவரின் கொள்கைகள் அல்லது சித்தாந்தத்தை ஏன் நியாயப்படுத்துகிறார்கள்?. இது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.
இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.