மகாராஷ்டிராவில் 11,877 பேருக்கு கொரோனா: புதிய வேகம் எடுக்கும் தினசரி பாதிப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா அறிகுறி காரணமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 250 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

மும்பை:

மகாராஷ்டிராவில் இன்று 11,877 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் தற்போது  கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 42,024-ஆக அதிகரித்துள்ளது.

இன்று மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 9 பேர் கொரோனாவுக்கு மரணம் அடைந்துள்ளனர். 2,069 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  மேலும் அம்மாநிலத்தில் கொரோனா அறிகுறி காரணமாக 2 லட்சத்து 43 ஆயிரத்து 250 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,091 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று மகாராஷ்டிராவில் 50 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் அம்மாநிலத்தில் ஒமைக்ரானின் மொத்த பாதிப்பு 510-ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com