மகாராஷ்டிரா பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கம்!

2.46 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, 1.66 கோடியாகக் குறைந்துள்ளது.
மகாராஷ்டிரா பெண்கள் உதவித்தொகை திட்டத்தில் இருந்து 80 லட்சம் பெண்கள் நீக்கம்!
Published on

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பின்பற்றி வட மாநில அரசுகள் சிலவும் பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில் மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு லட்கி பாகின் திட்டத்தின் கீழ் பெண்களுக்கு மாதம் ரூ.1500 வழங்கி வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த பெண்களில் 80 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் திட்டப் பயனாளிகளை தணிக்கை செய்ய அரசு e-KYC நடைமுறையை கட்டாயமாக்கியது. இதற்கு ஏப்ரல் 30வரை அவகாசம் அளிக்கப்ட்டது.

காலக்கெடுவுக்குள் தங்கள் வங்கிகணக்கில் e-KYC சரிபார்ப்பை முடிக்காத 80 லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி அற்றவர்களாக அரசு முடிவெடுத்துள்ளது.

காலக்கெடுவை மேலும் நீடிக்க பெண்கள் தரப்பில் இருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்தபோதும், அதற்கு சாத்தியமில்லை என அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கடந்த 2024இல் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக லட்கி பாகின் யோஜ்னா தொடக்கப்பட்டபோது 2.46 கோடியாக இருந்த பயனாளிகளின் எண்ணிக்கை, தற்பொழுது 1.66 கோடியாகக் குறைந்துள்ளது.

2024 தேர்தலிலுக்கு முன் கூட்டணியில் இருந்து சிவசேனா பிரிவு தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக இருந்து வந்த நிலையில் தேர்தல் வெற்றிக்கு பின் பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வர் ஆனது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com