மகாராஷ்டிரா: திருமணத்திற்கு செல்லும் வழியில் கோர விபத்து - 12 பேர் பலி

சுமார் 100 பேர் ஒரு திருமண விழாவிற்கு லாரியில் சென்று கொண்டிருந்தனர் .
மகாராஷ்டிரா: திருமணத்திற்கு செல்லும் வழியில் கோர விபத்து - 12 பேர் பலி
Published on

மகாராஷ்டிராவில் நடந்த கண்டெய்னர் லாரி, திருமணத்திற்கு சென்றுகொண்டிருந்தவர்கள் லாரி மீது மோதியதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 25 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் தனிவாரி கிராமத்திற்கு அருகே, மும்பை-அகமதாபாத் நெடுஞ்சாலையில் சுமார் 100 பேர் ஒரு திருமண விழாவிற்கு லாரியில் சென்று கொண்டிருந்தபோது, ​​முன்னால் சென்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரியுடன் மோதியது.

இதில் திருமணத்திற்கு சென்றுகொண்டிருத்தவர்கள் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

உள்ளூர்வாசிகள் தகவல் அளித்ததை தொடர்ந்து, மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

முதற்கட்ட விசாரணையில், அந்த லாரி அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றது தெரியவந்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com