'டார்லிங்.. தனியாக வந்தால் வினாத்தாள் தருகிறேன்..' மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர் கைது | Uttar pradesh

மாணவி, "நான் பாடத்திட்டங்கள் முழுவதையும் படித்துவிட்டேன், எனக்கு வினாத்தாள் தேவையில்லை" என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.
'டார்லிங்.. தனியாக வந்தால் வினாத்தாள் தருகிறேன்..' மாணவியிடம் அத்துமீறிய பேராசிரியர் கைது | Uttar pradesh
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர் பரம்ஜீத் சிங். இவர் இதே பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டு பி.எஸ்.சி படிக்கும் மாணவி ஒருவரை துன்புறுத்தல் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் மாணவியிடம் பேசிய ஆடியோ பதிவு இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளது.

அந்த ஆடியோவில், "டார்லிங், நான் உனக்காக இரண்டு தேர்வு வினாத்தாள்களை தயார் செய்து வைத்துள்ளேன். தேர்வுக்கு முன்பு எனது வீட்டிற்கு வந்தால் அதைத் தருகிறேன், எப்போது வருவாய்?" என்று பேராசிரியர் கேட்கிறார்.

அதற்கு அந்த மாணவி, "நான் பாடத்திட்டங்கள் முழுவதையும் படித்துவிட்டேன், எனக்கு வினாத்தாள் தேவையில்லை" என்று மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அந்தப் பேராசிரியர் பலமுறை மாணவியைத் தனது வீட்டிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.

தான் விடுப்பில் இருந்தபோது கூட அந்தப் பேராசிரியர் தன்னைத் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்து, கல்லூரிக்கு வருமாறு கட்டாயப்படுத்தி தனக்குக் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அந்த மாணவி பல்கலைக்கழக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்தப் பேராசிரியரைப் பல்கலைக்கழகத்தில் இருந்து உடனடியாகப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

பல்கலைக்கழக அதிகாரிகள் அளித்த பேரில் FIR பதிவு செய்த போலீசார் பேராசிரியரை கைது செய்தனர். நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் பூதமகரமாக வெடித்துள்ள நிலையில் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com