சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் விவகாரம்: பிரதமர் மோடிக்கு கார்கே அவசரக் கடிதம்

எங்களை கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது என்று பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
சிறப்பு நாடாளுமன்ற கூட்டம் விவகாரம்: பிரதமர் மோடிக்கு கார்கே அவசரக் கடிதம்
Published on

பெண்களுக்கு மக்களவை மற்றும் மாநிலங்களில் உள்ள சட்டசபை இடங்களில் 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் முக்கியமான அரசிலமைப்பு திருத்த மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு வருகிற 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை சிறப்பு கூட்டத் தொடரை கூட்ட முடிவு செய்துள்ளது.

ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் நிலையில், இந்த முன்னெடுப்பு அரசியல் ஆதாயத்திற்காக என எதிர்க்கட்சிகள் பாஜக-வை விமர்சனம் செய்து வருகின்றன.

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் கார்கே கூறியிருப்பதாவது:-

* எங்களை கலந்தாலோசிக்காமல் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட இருக்கிறது.

* மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை குறித்த எந்த விவரங்களையும் வெளியிடாமல் உங்கள் அரசு எங்கள் ஒத்துழைப்பைக் கோருகிறது.

* தொகுதி மறுவரையறை மற்றும் பிற அம்சங்கள் குறித்த விவரங்கள் இல்லாமல், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டம் குறித்து எந்தவொரு பயனுள்ள விவாதத்தையும் நடத்துவது சாத்தியமற்றது.

* மாநில தேர்தல்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டுவது, அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் சட்டத்தை அரசு அவசரமாகச் செயல்படுத்துகிறது என்ற நம்பிக்கையை வலுப்படுத்துகிறது

* ஏப்ரல் 29-க்குப் பிறகு, மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்துடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.

* திட்டமிடப்பட்டுள்ள அரசியலமைப்புத் திருத்தங்கள் மத்திய, மாநில அரசுகளைப் பாதிக்கும். ஜனநாயகத்தில் அனைத்துக் கட்சிகள், மாநிலங்களின் கருத்துக்களும் கேட்கப்பட வேண்டும்.

இவ்வாறு கார்கே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com