அதிகாலையிலேயே அதிர்வு.. லடாக்கை தாக்கிய நிலநடுக்கம்

மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நில அதிர்வுகள் உணரப்பட்டது.
அதிகாலையிலேயே அதிர்வு.. லடாக்கை தாக்கிய நிலநடுக்கம்
Published on

இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் அருகே அமைந்துள்ள லடாக்கின் லே பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தேசிய நில அதிர்வு ஆய்வு மையத்தின்படி, லடாக்கின் லே பகுதியில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 3:54 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.1 ஆகப் பதிவானது. இது 150 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது.

மக்கள் உறக்கத்தில் இருந்தபோது நில அதிர்வுகள் உணரப்பட்டதால், மக்கள் பீதியடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர்.

இருப்பினும், எந்த உயிரிழப்போ அல்லது சொத்து சேதமோ ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com