7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், 30 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்திடம் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

1993 ஆம் ஆண்டு ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார்.ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர்.
7 வயதில் கடத்தப்பட்ட சிறுவன், 30 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்திடம் சேர்ந்த நெகிழ்ச்சி சம்பவம்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பள்ளியில் இருந்து வீடு திரும்பும்போது கடத்தப்பட்ட 7 வயது சிறுவன் ராஜூ, 30 வருடங்களுக்கு பிறகு 37 வயதில் அவரின் குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1993 ஆம் ஆண்டு சாஹிபாபாத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ராஜு என்ற 7 வயது சிறுவன் செப்டம்பர் 8 ஆம் தேதி காணாமல் போனார். இது தொடர்பாக அவரது குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தும் ராஜுவை கண்டுபிடிக்க முடியவில்லை.

ராஜூவை கடத்தியவர்கள் அவரை ராஜஸ்தானுக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு நாள் முழுவதும் அவரை வேலை வாங்கி உண்பவதற்கு வெறும் ஒரே ஒரு ரொட்டி மட்டும் கொடுத்துள்ளனர். இரவில் தப்பித்து செல்லாமல் இருப்பதற்காக ராஜூவை அவர்கள் கட்டி வைத்துள்ளனர்.

பல ஆண்டுகளுக்கு பின்னர் அங்கிருந்து ராஜு தப்பித்து டெல்லிக்கு சென்று போலீசாரிடம் உதவி கேட்டுள்ளார். சமூக வலைத்தளத்தின் மூலம் இவரின் குடும்பத்தினரை கண்டறிய போலீசார் உதவியுள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com