

கேரளாவில் 140 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
கேரளாவில் பெரும்பான்மைக்கு 71 இடங்கள் தேவை. காலை 11 மணி நிலவரப்படி காங்கிரசின் யுடிஎப் கூட்டணி 85 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
பினராயி விஜயன் தலைமையிலான ஆளும் இடது முன்னணி கூட்டணி 42 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக 1 இடத்தில் முன்னிலையில் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி பினராயி விஜயன் ஆட்சியை இழப்பார் என்று தெரிகிறது. காங்கிரஸ் ஆட்சி கேரளாவில் அமைய உள்ளது.
அதேநேரம் காலை 11 மணி நிலவரப்படி, தர்மாடம் (Dharmadam) தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 26779 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அப்துல் ரஷீத் அவரை விட 1090 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.