வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 43 ஆண்டுகள் சிறை

குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார்.சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
வளர்ப்பு மகளை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு 43 ஆண்டுகள் சிறை
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி பகுதியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் 17 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார். அந்த சிறுமியை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். இது தொடர்பான வழக்கு அங்குள்ள விரைவு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது.

அதில் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு போக்சோ, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 43 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்கீஸ் உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஒரே நேரத்தில் அனுபவிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com