கேரள சட்டப்பேரவைத் தேர்தல் - 47 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக

கேளர சட்டமன்ற தேர்தலையொட்டி முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது அம்மாநில பாரதிய ஜனதா கட்சி.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் - 47 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பாஜக
கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர்
Published on

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி கேரளம் பாஜக 47 பேர்கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவின் கேரள மாநிலத் தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், முன்னாள் மாநிலத் தலைவர் கே. சுரேந்திரன் மற்றும் மூத்த தலைவர் சோபா சுரேந்திரன் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதன்படி திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர தொகுதியாக நேமத்தில் ராஜீவ் சந்திரசேகரை நிறுத்தியுள்ளது. இத்தொகுதியில் கடந்த 2016-ல் பாஜக வென்றது. கடந்த தேர்தலில் சிபிஐ(எம்) வேட்பாளர், தற்போதைய கல்வி அமைச்சர் வி.சிவன்குட்டி 3949 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றார். பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது.

மற்றொரு முக்கிய தொகுதியான பாலக்காட்டில் சோபா சுரேந்திரனை பாஜக நிறுத்தியுள்ளது. மஞ்சேஸ்வரம் பாஜகவிற்கு மற்றொரு முக்கியமான தொகுதியாகும். இதில் முன்னாள் மாநிலத்தலைவர் கே. சுரேந்திரன் போட்டியிடுகிறார்.

மார்ச் 12 அன்று அக்கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜகவின் மத்திய தேர்தல் குழுவால் இந்தப் பெயர்கள் இறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com