விமானத்தின் சுழலும் இறக்கையில் சிக்கி பெண் பயிற்சி விமானி படுகாயம் - கான்பூரில் அதிர்ச்சி

எஞ்சின்கள் இயங்கிக்கொண்டிருந்தபோதே பெண் பயிற்சி விமானி விமானத்திலிருந்து வெளியேறினார்.
விமானத்தின் சுழலும் இறக்கையில் சிக்கி பெண் பயிற்சி விமானி படுகாயம் - கான்பூரில் அதிர்ச்சி
Published on

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் விமான றெக்கை (propeller)இல் சிக்கி பெண் பயிற்சி விமானி ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நேற்று இரவு கான்பூர் சகேரி விமான நிலையத்தில் கார்க் ஏவியேஷன் நிறுவனத்தின் டெக்னாம் பி2006டி இரட்டை எஞ்சின் பயிற்சி விமானத்தில் ஒரு விமானப் பயிற்றுவிப்பாளர் மற்றும் ஒரு பெண் பயிற்சி விமானி பயணம் செய்தனர்.

விபத்து

விமானம் தரையிறங்கிய பிறகு, எஞ்சின்கள் இயங்கிக்கொண்டிருந்தபோதே பெண் பயிற்சி விமானி விமானத்திலிருந்து வெளியேறினார்.

அவர் வெளியே நடந்து வந்தபோது, ​​விமானத்தின் சுழலும் இறக்கை அப்பெண்ணின் முதுகில் மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் டனடியாக கான்பூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை நடைபெற்று வருகிறது.

விசாரணை

இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட விமான போக்குவரத்துக்கு கட்டுப்பாட்டு இயக்குனரகம், விசாரணை முடியும் வரை பயிற்றுவிப்பாளர் பயிற்சிப் பணிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், விசாரணை முடியும் வரை விபத்தில் சம்பந்தப்பட்ட டெக்னாம் பி2006டி விமானத்தைப் பயிற்சிக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com