Jag Vasant: 42,000 டன் LPG உடன் குஜராத் வந்தடைந்த இந்திய கப்பல்

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையை பூர்த்தி செய்யும் ஏற்றுமதி பாதை ஹார்முஸ் ஜலசந்தி.
Jag Vasant:  42,000 டன் LPG உடன் குஜராத் வந்தடைந்த இந்திய கப்பல்
Published on

ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி 28 முதல் சுமார் 1 மாத காலமாக போர் நடந்து வருகிறது.

இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டு எண்ணெய், எரிவாயு ஏற்றுமதி பாதிக்கப்பட்டு பல உலக நாடுகள் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளன.

உலகின் 20 சதவீத எண்ணெய் தேவையை பூர்த்தி செய்து வந்த ஏற்றுமதி பாதையான ஹார்முஸ் ஜலசந்தி வழியே எதிரிகள் மற்றும் அவர்களை ஆதரிக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு ஈரான் அனுமதி மறுத்து வருகிறது.

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஈரான் சிறப்பு அனுமதி வழங்கியது.

அந்த வகையில் சுமார் 42,000 டன் எல்பிஜி எரிவாயுவுடன் 'ஜக் வசந்த்' என்ற கப்பல் இன்று (மார்ச் 27) குஜராத்தின் கண்ட்லா துறைமுகத்தை வந்தடைந்தது.

சமீபத்திய நாட்களில் இந்தியாவிற்குப் பாதுகாப்பாக வந்துள்ள மூன்றாவது எல்பிஜி கப்பல் இதுவாகும்.

இதற்கு முன்னதாக 'சிவாலிக்' மற்றும் 'நந்தா தேவி' ஆகிய இரண்டு கப்பல்கள் குஜராத்தின் முந்த்ரா மற்றும் வாடினார் துறைமுகங்களுக்கு சுமார் 92,000 டன் எரிவாயுவை ஏற்றி வந்தன.

X

Maalai Malar
www.maalaimalar.com