‘ராகுல் காந்திக்கு திருப்தியை அளித்திருக்கும்’ - அமலாக்கத்துறை சோதனை குறித்து பினராயி கருத்து!

தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் அத்துமீறல் தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு
‘ராகுல் காந்திக்கு திருப்தியை அளித்திருக்கும்’ - அமலாக்கத்துறை சோதனை குறித்து பினராயி கருத்து!
Published on

கேரள முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனுக்கு தொடர்பான 12 இடங்களில் இன்று அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜயன், தற்போது ராகுல் காந்தியின் ஆசை நிறைவேறியிருக்கும் என தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய பினராயி,

“நீண்டநாட்களாகவே என்வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை விரும்பியது. தற்போது இந்தச் சோதனை சிலருக்கு, குறிப்பாக ராகுல் காந்தி போன்றவர்களுக்குப் பெரும் திருப்தியையும், மனநிறைவையும் அளிக்கும் என நினைக்கிறேன்.

பினராயி விஜயன் வீட்டில் ஏன் சோதனை நடத்தப்படவில்லை, பினராயி விஜயன் ஏன் கைது செய்யப்படவில்லை என்று ராகுல் காந்தி கேட்டுக்கொண்டே இருந்தார். பா.ஜ.க அரசு எப்போதுமே நாட்டில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு எதிராகத் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அதற்கு எதிரான வலுவான போராட்டங்கள் நாடு முழுவதும் எழுந்துள்ளன. தங்களைத் தவிர மற்ற கட்சிகளுக்கு எதிரான அமலாக்கத்துறையின் அத்துமீறல் தொடர வேண்டும் என்பதுதான் காங்கிரஸின் நிலைப்பாடு.” என தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், இதுபோன்ற நடவடிக்கைகள் எங்களை அச்சுறுத்தவோ , பலவீனப்படுத்தவோ செய்யாது எனவும் தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com