2040-ம் ஆண்டுக்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்: ISRO

ஒரே ராக்கெட்டைப் பயன்படுத்தி 104 செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.
2040-ம் ஆண்டுக்குள் இந்தியா மனிதர்களை நிலவுக்கு அனுப்பும்: ISRO
Published on

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டமாகும்.

சமீபத்தில், விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட்டை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதனை செய்தது. இது ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் கூறியதாவது:

வரும் 2040-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் நோக்கில் இந்தியா பணியாற்றி வருகிறது.

இஸ்ரோ ஒரே ராக்கெட்டைப் பயன்படுத்தி 104 செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியுள்ளது.

இது வேறு எந்த நாடும் நிகழ்த்தாத ஒரு சாதனையாகும். ஜி20 செயற்கைக்கோளின் இந்த ஏவுதல் விண்வெளித் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் மூலோபாய முன்னெடுப்பின் ஒரு பகுதியாகும். இது உலகளாவிய ஒத்துழைப்புக்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது என தெரிவித்தார்.

ககன்யான் 4 திட்டம் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் நிலவின் சுற்றுப்பாதையில் மனிதர்களை அனுப்ப இஸ்ரோ பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com