

உத்தர பிரதேசத்தின் பிரதான எதிர்க்கட்சி சமாஜ்வாதி. இதன் தலைவர் அகிலேஷ் யாதவ். இவர் மக்களவை எம்.பி.யாக உள்ளார். ஆளும் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
இந்த சூழலில் அண்மையில் உத்தர பிரதேச மாநிலத்தின் பேட்பூர் மாவட்டத்தில் உள்ள டீக்கடை ஒன்றிற்கு அகிலேஷ் யாதவ் சென்றுள்ளார்.
அங்கு ஒரு டீ கடையில் டீ குடித்த அவர் டீக்கடை உரிமையாளரான இளைஞர் ஆரியன் உடன் சகஜமாக பேசிவிட்டு பின்னர் ஒன்றாக புகைபடம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.
இந்த நிலையில் அகிலேஷ் யாதவ் சென்ற டீக்கடைக்கு சென்ற அதிகாரிகள், அலுமினிய பாத்திரத்தில் டீ தயாரிப்பதாக கூறி கடைக்கு சீல் வைக்க போவதாக அதிகாரிகள் எச்சரித்தாக தெரிகிறது.
அரசியல் உள்நோக்கத்துடன் தன் கடை குறிவைக்கப்படுவதாகவும், தனது வாழ்வாதாரம் பறிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவித்த டீக்கடை உரிமையாளர் ஆரியன் தனது கடையை மூடுவதாக அறிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் அதிகாரிகளின் அடாவடித்தனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.