என் மலர்
இந்தியா

விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும் - மம்தா பானர்ஜி
- விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார்
- அஜித் பவார் மரணத்திற்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்
மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் (66) சென்ற விமானம் இன்று காலை தரையிறங்கும்போது விபத்தில் சிக்கியது.
இந்த விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்தார். மேலும் அவருடன் பயணித்த 3 பேரும், 2 விமானிகளும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமான விபத்து குறித்து முறையான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொரபாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அஜித் பவாரின் திடீர் மறைவால் நான் ஆழ்ந்த அதிர்ச்சி அடைந்தேன்! மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சரும் அவருடன் பயணித்தவர்களும் இன்று காலை பாராமதியில் நடந்த ஒரு கோரமான விமான விபத்தில் உயிரிழந்துள்ளனர், இதனால் நான் மிகுந்த துயரத்தில் ஆழ்ந்துள்ளேன்.
அவரது சித்தப்பாவான சரத் பவார் உட்பட அவரது குடும்பத்தினருக்கும், மறைந்த அஜித் பவாரின் நண்பர்களுக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.






