

இந்த நாட்டில் வாழ்வதற்கு வெட்கப்படுகிறேன் என மாநிலங்களவை உறுப்பினரும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி அபிஷேக் பானர்ஜி மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து ஞாயிற்றுக்கிழமை கருத்து தெரிவித்த கபில் சிபல், "ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி, ஜனநாயகத்தின் வேர்களை அறுப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு நாட்டில் வாழ்வதற்கு நான் வெட்கப்படுகிறேன்" என்று மத்திய அரசை சாடினார்.
கபில் சிபலின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் செக்ஷாத் பூனவல்லா, கபில் சிபல் இதே நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி கோடிக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கிறார். ஆனால், இதே நாட்டில் வாழ்வதற்குத் தனக்கு வெட்கமாக இருப்பதாகக் கூறுகிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் வெடித்தபோது, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கொல்லப்பட்டபோது கபில் சிபல் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை?
ஆர்.ஜி. கர் விவகாரம் மற்றும் சந்தேஷ்காளி சம்பவங்களின் போதும் கபில் சிபல் ஏன் மௌனமாக இருந்தார்?
பாஜகவை எதிர்ப்பது என்பது வேறு, நாட்டை எதிர்ப்பது என்பது வேறு. அரசியல் ரீதியாகக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதற்காக நாட்டின் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மலேசியாவில் அதிரடி: 16 வயதிற்குட்பட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை; விதிகள் அமல்!