

நடப்பு ஆண்டுக்கான உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசையில் இந்தியாவுக்கு 125-வது இடம் கிடைத்துள்ளது.
ஆண்டு தோறும் உலகளாவிய பாஸ்போர்ட் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.
சர்வதேச பயணங்களுக்கான எளிமை, பிற நாடுகளில் வசிப்பதற்கும், பணிபுரிவதற்கும் மற்றும் முதலீடு செய்வதற்கும் நாடுகளின் பாஸ்போர்ட் வழங்கும் நன்மைகள் அடிப்படையில் தரவரிசைப்படுத்துகிறது.
இந்நிலையில், 2026-ம் ஆண்டுக்கான உலகளாவிய பாஸ்போர்ட் குறியீடு வெளியிடப்பட்டுள்ளது. இதில் 197 நாடுகளில் இந்தியா
125-வது இடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த 2025-ம் ஆண்டில் 124-வது இடத்தில் இருந்த இந்தியா ஒரு இடம் பின்தங்கி உள்ளது.
இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 26 நாடுகளுக்கு விசா இல்லாமலே செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
விசா இல்லாமல் பயணியக்கூடிய நாடுகளில் இந்தோனேசியா, பூட்டான், மாலத்தீவு, தாய்லாந்து, கென்யா உள்ளிட்ட நாடுகள் அடங்கும்.
ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, பின்லாந்து, ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, அயர்லாந்து, இங்கிலாந்து, நார்வே, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.