என் மலர்tooltip icon

    இந்தியா

    மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலை பறிபோகும் - உச்சநீதிமன்றம் அச்சம்
    X

    மாதவிடாய் விடுமுறையை கட்டாயமாக்கினால் பெண்களின் வேலை பறிபோகும் - உச்சநீதிமன்றம் அச்சம்

    • அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் நிலையை உருவாக்கும்
    • முதலாளிகளின் மனநிலை பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக மாறும்.

    பெண்களுக்கான மாதவிடாய் விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது, அவர்களின் வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் விடுமுறை அளிக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சைலேந்திர மணி திரிபாதி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

    இதன்போது பேசிய தலைமை நீதிபதி சூர்யா காந்த், "மாதவிடாய் விடுமுறையை சட்டமாக கட்டாயமாக்கினால், நிறுவனங்களின் உரிமையாளர்கள் பெண்களை வேலைக்கு எடுக்கத் தயங்குவார்கள்.

    இது பெண்களின் தொழில் வாழ்க்கையை பாதித்து, அவர்களை வீட்டிலேயே இருக்கச் சொல்லும் நிலையை உருவாக்கும்.

    இத்தகைய சட்டம், பெண்கள் தங்களை ஆண்களை விடக் குறைந்தவர்கள் என்று நினைக்கும் ஒரு மனநிலையை உருவாக்கும்.

    சில தனியார் நிறுவனங்கள் தானாக முன்வந்து இந்த விடுமுறையை அளிப்பது வேறு, ஆனால் அதை ஒரு சட்டமாகக் கட்டாயமாக்கும்போது முதலாளிகளின் மனநிலை பெண்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக மாறும்" என்று தெரிவித்தார்.

    இதே வழக்கில் கடந்த ஜனவரி மாதம், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "மாதவிடாய் சுகாதாரம் என்பது பெண்களின் வாழும் உரிமை, கல்வி மற்றும் ஆரோக்கியத்தின் ஒரு பகுதி" என்று கூறியிருந்தது.

    மேலும், இலவச சானிட்டரி நாப்கின்கள் மற்றும் கழிப்பறை வசதிகளை உறுதி செய்ய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

    இருப்பினும், விடுமுறையை சட்டரீதியாகக் கட்டாயமாக்குவது நடைமுறைச் சிக்கல்களை உருவாக்கும் என்று தலைமை நீதிபதி தற்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

    Next Story
    ×