திருப்பதி கோவிலில் கடந்த ஆண்டு ரூ.1,420 கோடி உண்டியல் வசூல்

கடந்த 6 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.120 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.
திருப்பதி கோவிலில் கடந்த ஆண்டு ரூ.1,420 கோடி உண்டியல் வசூல்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக உண்டியலில் தங்கம், வெள்ளி, வைரம், பணம், வெளிநாட்டு கரன்சி காணிக்கையாக செலுத்துகின்றனர்.

கடந்த 2023-ம் ஆண்டு முதல் 25-ம் ஆண்டு வரை ஒரு நாளைக்கு சராசரியாக 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். தற்போது ஒரு நாளைக்கு சராசரியாக 73 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.

கடந்த 6 மாதங்களாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக ரூ.120 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. அதன்படி கடந்த ஆண்டு ரூ.1,420 கோடி உண்டியல் காணிக்கை வசூலாகி உள்ளது. 13.95 கோடி லட்டுகள் விற்பனையாகி உள்ளது.

திருப்பதியில் நேற்று 81,288 பேர் தரிசனம் செய்தனர். 34,892 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.43 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 15 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com