வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழை - 30 பேர் உயிரிழப்பு

வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.அசாம் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழை - 30 பேர் உயிரிழப்பு
Published on

வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.

அசாம், அருணாச்சலப்பிரதேசம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அசாம் மாநிலத்தில் மட்டும் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் கார் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com