கேரளாவில் 27-ந்தேதி வரை கனமழை: 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு-மஞ்சள் அலார்ட்

மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.
கேரளாவில் 27-ந்தேதி வரை கனமழை: 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு-மஞ்சள் அலார்ட்
Published on

திருவனந்தபுரம்:

வங்கக்கடலில் உருவாகி யிருக்கும் "டானா" புயல் தீவிர புயலாக மாறியிருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

"டானா" புயல் காரண மாக கேரள மாநிலத்திலும் மழை பெய்து வருகிறது. மத்திய கிழக்கு அரபிக் கடலில் கர்நாடகா கடற் கரை பகுதியில் புயல் நிலை கொண்டிருப்பதன் காரணமாகவே கேரளாவில் மழை பெய்து வருகிறது.

அங்கு வருகிற 27-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

கோட்டயம், எர்ணாகுளம் இடுக்கி, திருச்சூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலார்ட்டும், திருவனந்த புரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலார்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த மாவட்டங்களில் மக்கள் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com