பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது

பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டது.பாகிஸ்தானுக்கு உளவு பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த பெண் யூ டியூபர் உள்பட 6 பேர் கைது
Published on

சண்டிகர்:

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது இந்தியா. இதனால் இரு நாடுகள் இடையே பதற்றமான சூழல் நிலவிவருகிறது.

மேலும், பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை களை எடுக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்து வந்தவர்கள் ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர்.

இந்நிலையில், அரியானா மற்றும் பஞசாப் மாநிலங்களில் மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணையில், இவர்கள் பாகிஸ்தானுக்கு முகவர்களாகவும், ரகசியங்களைக் கொடுப்பவர்களாகவும், நிதி பரிமாற்றம் செய்பவர்களாகவும் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.

டிராவல் வித் ஜோ என்ற பெயரில் யூடியூப் சேனலை நடத்தி வரும் ஜோதி மல்ஹோத்ரா என்ற பெண் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜோதி மல்ஹோத்ரா கடந்த 2023ம் ஆண்டு கமிஷன் ஏஜெண்ட் மூலம் விசா பெற்று பாகிஸ்தானுக்கு சென்றுள்ளார். வாட்ஸ் அப், டெலிகிராம் உள்ளிட்டவைகளில் பாகிஸ்தானியருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்திய பகுதிகள் குறித்த ரகசியங்களை அவர்களுக்கு பகிர்ந்து வந்ததுடன், சமூக வலைதளங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com