Uniform Civil Code | குஜராத் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம்!

பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசு பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.
Gujarat Assembly passes Uniform Civil Code Bill
Gujarat Assembly passes Uniform Civil Code Bill
Published on

நாட்டின் அனைத்து மத, மொழி, இன மக்களுக்கும் ஒரே மாதிரியான, பொதுவான உரிமைகளை வழங்கும் விதத்தில் பொது சிவில் சட்டம் ஒன்றை இயற்றுவதை மத்திய பா.ஜ.க. அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதற்கிடையே, நாட்டிலேயே முதல் மாநிலமாக உத்தரகாண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.

உத்தரகாண்டை தொடர்ந்து பா.ஜ.க. ஆளும் குஜராத் மாநில அரசு பொது சிவில் சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் நிறைவேற்றியுள்ளது.

இதன்மூலம் திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றிற்கு மதம் கடந்து பொதுவான விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன. இச்சட்டம் பழங்குடியினருக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com