என் மலர்
இந்தியா

அரசு பேருந்து பறிமுதல்- தமிழக அரசுக்கு கேரளா எச்சரிக்கை
- அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை தமிழகத்தில் இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
- கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம்.
தமிழகத்தில் கடந்த 14-ந்தேதி முதல் உரிய தமிழக பதிவு எண் மற்றும் அனுமதிச் சீட்டு பெறாமல் இயக்கப்படும் ஆம்னி பஸ்களை இயங்க போக்குவரத்து துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் கேரள போக்குவரத்து துறை அமைச்சர் கே.பி.கணேஷ் குமார் தமிழகத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகளுக்கான வரியை உயர்த்தியதற்காக தமிழகத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று கேரள சட்டசபையில் பட்ஜெட்டில் போக்குவரத்துத் துறைக்கான மானியங்கள் மற்றும் வாகனங்கள் வரி மீதான விவாதத்தை நிறைவு செய்த அமைச்சர், கேரள மாநில சாலை போக்குவரத்து கழகத்தின் பேருந்து கூட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் கூறுகையில், கேரள பேருந்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கை தொடர்ந்தால் கேரளாவுக்கு வரும் தமிழக பேருந்துகளை சிறைபிடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Next Story






