தந்தையர் தினத்தை சிறப்பு டூடுல் மூலம் கொண்டாடும் கூகுள்

குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.
google
Published on

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கவுரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

தந்தையர் தினத்தில் அனைவரும் தந்தைக்கு நேரிலோ அல்லது அலைபேசியிலோ வாழ்த்துக்களைத் தெரிவிக்கலாம்.

இந்தியாவில் இந்த ஆண்டு ஜூன் 21-ம் தேதி தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

தாயின் அன்புக்கு நிகரானது தந்தையின் பாசம். குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பது தாய் என்றால், நாள் எல்லாம் நெஞ்சில் சுமப்பவர் தந்தை.

குழந்தையின் ஆரோக்கியம்மீது தாய் கவனம் செலுத்துவதுபோல, அதன் முன்னேற்றத்துக்காக ஆயுள் முழுவதும் உழைப்பவர் தந்தை.

‘அன்னையிடம் அன்பை வாங்கலாம், தந்தையிடம் அறிவை வாங்கலாம்’ என்ற பாடல் வரிகள் தாய், தந்தையரின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன.

அப்பாக்களை கொண்டாடும் வகையில் இன்று (ஜூன் 21) பல்வேறு நாடுகளில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், தந்தையர் தினத்தை கொண்டாடும் வகையில் ‘சிறப்பு டூடுல்’ மூலம் ‘கூகுள்’ கொண்டாடி மகிழ்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com