திரிவேணி சங்கமத்தில் திரண்ட பக்தர்கள்.. அனுமன் கோவிலில் சிறப்பு வழிபாடு

லேதே ஹனுமான் கோவிலில் கடவுள் அனுமனை வழிபட்டனர்.
திரிவேணி சங்கமத்தில் திரண்ட பக்தர்கள்.. அனுமன் கோவிலில் சிறப்பு வழிபாடு
Published on

இந்து மத நம்பிக்கையில் கங்கை நதி சொர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறங்கி வந்த நாள் கங்கா தசராவாக கொண்டாடப்படுகிறது.

நடப்பாண்டில் இந்த விழா நேற்று (மே 25) தொடங்கியது. மே 28 வரை இவ்விழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது.

இந்த புனித விழாவையொட்டி கங்கை மற்றும் அதன் கிளை நதியை ஒட்டிய புனித தளங்களில் மக்கள் வழிபாடு செய்து புனித நீராடுகின்றனர்.

அந்த வகையில் உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இன்று காலையிலேயே ஏராளாமான பக்தர்கள் திரண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

புத்வ மங்கல் எனப்படும் புனித செவ்வாய்கிழமையை ஒட்டி மக்கள், திரிவேணி சங்கமத்தின் அருகில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க லேதே ஹனுமான் கோவிலில் கடவுள் அனுமனை வழிபட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com