

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு எதிராக இளைஞர்கள், மற்றும் மாணவர்கள் திரண்டு போராட வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்தார்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும் என கெஜ்ரிவால் வலியுறுத்தி இருந்தார். இதையடுத்து, நீட் தேர்வு எழுதச் செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் அரசு பேருந்துகளில் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என பஞ்சாப் முதல் மந்திரி பகவந்த் மான் தெரிவித்தார்.
இந்நிலையில், பஞ்சாப்பைத் தொடர்ந்து பீகார் மாநில அரசும் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து வசதியை வழங்குகிறது.
இதுதொடர்பாக, பீகார் முதல் மந்திரி சாம்ராட் சவுத்ரி எக்ஸ் வலைதளத்தில், நீட் தேர்வு மாணவர்கள் அரசு பஸ்களில் இலவசமாக சென்று வரலாம். மாணவர்கள் மற்றும் அவரகளின் பெற்றோருக்கு குடிதண்ணீர் உள்ளிட்ட தேவையான வசதிகளைச் செய்து தரும்படி உத்தரவிட்டுள்ளார்.