பாஜகவில் இணைந்த முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!

முன்னதாக திரிணாமுல் காங்கிரஸில் இருந்த லியாண்டர் பயஸ் தற்போது பாஜகவில் இணைந்துள்ளார்.
பாஜகவில் இணைந்த முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்!
Published on

இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியாண்டர் பயஸ், இன்று பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

சமீபத்தில் இவர் பாஜகவின் தேசியத்தலைவர் நிதின் நபினை சந்தித்தபோதே பாஜகவில் இணையவுள்ளதாக பேச்சுகள் எழுந்தன. இந்நிலையில் மேற்குவங்க தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இணைந்துள்ளார்.

கடந்த 2021-ல் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த லியாண்டர், 2022-ல் நடைபெற்ற கோவா தேர்தலில் போது அக்கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். ஆனால் தேர்தலில் போட்டியிடவில்லை.

மேற்கு வங்கத் தேர்தலைத் தொடர்ந்து மாநிலங்களவையில் காலியிடம் ஏற்பட்டால், அப்பதவிக்கு இவர் பரிசீலிக்கப்படலாம் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போதைய தேர்தலில் பாஜகவிற்காக பிரச்சாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குவங்கத்தில் ஏப்ரல் 23 மற்றும் ஏப்ரல் 29 என இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com