நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மம்தா அழைப்பு

மாணவர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்
நாடு முழுவதும் பாஜகவை எதிர்க்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் - மம்தா அழைப்பு
Published on

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, சுவேந்து அதிகாரி தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவி மம்தா பானர்ஜி எதிர்க்கட்சிகளுக்கு முக்கியமான அழைப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

பாஜகதான் நம் அனைவருடைய முதல் எதிரி. நாட்டில் இடதுசாரி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகள் அனைத்தும் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அரசியல் கட்சிகள் மட்டுமின்றி மாணவர் சங்கங்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

மாநிலத்திற்குள் "தீய சக்திகள்" நுழைந்துவிட்டதாக பாஜகவை அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் தோல்வி குறித்து பேசிய அவர், நான் யாரிடமிருந்தும் அனுதாபத்தை எதிர்பார்க்கவில்லை. இந்தப் போரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும் என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com