மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!

இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.
மின்னல் தாக்கி 5 பேர் உயிரிழப்பு - பீகாரில் சோகம்!
Published on

பீகாரின் மூன்று மாவட்டங்களில் நிகழ்ந்த மின்னல் தாக்குதல் சம்பவங்களில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையின்படி, வைஷாலி மாவட்டத்தில் மூன்று பேரும், நவாடா மற்றும் ஜமுய் மாவட்டங்களில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் சம்ராட் சௌத்ரி, இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்குத் தனது இரங்கலை தெரிவித்து கொண்டார்.

பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றுமாறு மாநில மக்களை சௌத்ரி கேட்டுக்கொண்டதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com