கங்கை ஆற்றில் படகில் சிக்கன் சமைத்து பீர் அருந்திய 5 பேர் கைது

கைதான அனைவரும் 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
கங்கை ஆற்றில் படகில் சிக்கன் சமைத்து பீர் அருந்திய 5 பேர் கைது
Published on

வாரணாசியில் கங்கை ஆற்றின் நடுவே படகு ஒன்றில் சிக்கன் சமைத்து பீர் அருந்துவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாக காவல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசாரணைக்கு பிறகு சம்பந்தப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும், அந்த படகு பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தசாஸ்வமேத் பகுதி உதவி காவல் ஆணையர் (ACP) அதுல் அஞ்சன் திரிபாதி தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் தீபக் குமார், அஜய் சாஹ்னி, அருண் குமார் சாஹ்னி, அனுராக் நிஷாத் மற்றும் ராகுல் சாஹ்னி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 32 வயதுக்குட்பட்டவர்கள் என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com