தலைமை செயலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து

தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார் மோகன் யாதவ்
தலைமை செயலக கட்டிடத்தில் திடீர் தீ விபத்து
Published on

மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமை செயலகமான வல்லப் பவன் (Vallabh Bhavan), உள்ளது.

இன்று காலை, தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.

தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீப்பற்றி எரியும் கட்டிடத்தில் இருந்து கரும் புகை வெளியேறி அப்பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

தீ விபத்து குறித்து ம.பி. முதலமைச்சர் மோகன் யாதவ், "ஆட்சியரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வரும் விதமான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிய வந்துள்ளது. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவித்தார்.

தற்போது வரை உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

X

Maalai Malar
www.maalaimalar.com