‘தேவைப்பட்டால் கருணைக்கொலை செய்யுங்கள்’ - தெருநாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு

கருணைக்கொலை நடவடிக்கையானது தன்னிச்சையாக இருக்கக் கூடாது.
‘தேவைப்பட்டால் கருணைக்கொலை செய்யுங்கள்’ - தெருநாய்கள் வழக்கில் உச்ச நீதிமன்றம் உத்தரவு
Published on

வெறிபிடித்த, குணப்படுத்த முடியாத நோய்வாய்ப்பட்ட அல்லது மனித உயிருக்குத் தீவிர அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் கொடூரமாக நடந்துகொள்ளும் தெருநாய்களைச் தேவைப்பட்டால் சட்ட விதிமுறைகளின்படி கருணைக் கொலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ABC) விதிகள் 2023 மற்றும் பிற சட்டப்பூர்வ நெறிமுறைகளைப் பின்பற்றி, தகுதி வாய்ந்த கால்நடை மருத்துவ நிபுணர்களின் முறையான ஆய்வுக்குப் பிறகே இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இருந்து தெருநாய்களை அகற்றக் கோரி, கடந்த ஆண்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தளர்த்த அல்லது மாற்றியமைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களைத் தள்ளுபடி செய்து, இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம்.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி.அஞ்சாரியா அடங்கிய மூவர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com