என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்
    X

    கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன்

    • 14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது.
    • நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்று குற்றச்சாட்டு எழுந்தது.

    கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா மைசூரு நகர்ப்புற வளர்ச்சி அமைப்பின் (MUDA) நிலம் தொடர்பான மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.

    14 வீட்டுமனைகளை சித்தராமையா மனைவி பார்வதி பெற்றதில் முறைகேடு நடைபெற்றதாக பா.ஜ.க. குற்றம்சாட்டியது. அதாவது, பார்வதிக்கு சொந்தமான 3.16 ஏக்கர் வளர்ச்சியடையாத பகுதியில் உள்ள நிலத்துக்கு பதிலாக நன்கு வளர்ச்சியடைந்த நகர்ப் பகுதியில் 38,284 சதுர அடி நிலம் வழங்கப்பட்து என்றும் இதனால் அரசுக்கு ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பாக லோக்ஆயுக்தா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் மற்றும் ஏஜென்டுகள் உள்ளிட்ட பலரது பெயர்களில் இருந்த ரூ.300 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களை சமீபத்தில் அமலாக்கத்துறை முடக்கியது.

    இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி, அமைச்சர் சுரேஷ் ஆகியோர் நாளை [ஜனவரி 28] நேரில் அஜராகுமாறு அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது.

    கர்நாடகா முழுவதும் சித்தராமையாவின் நெருங்கிய நபர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை தொடர் சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×