அடுத்தகட்ட SIR: 22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் தீவிரம்

இரண்டாம் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையால் சுமார் 5.18 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்ட SIR:  22 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய தேர்தல் ஆணையம் தீவிரம்
Published on

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆர்) பனியின் 3ஆம் கட்டத்தை தேர்தல் ஆணையம் வரும் நாட்களில் தொடங்கவுள்ளது.

முதற்கட்டமாக பீகார் சட்டமன்ற தேர்தலுக்கு முன் அங்கு எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், பீகார், கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகியவற்றுக்கு இரண்டாம் கட்டமாக வாக்காளர் பட்டியல் திருத்தம் நடந்து முடிந்தது.

மொத்தம் இதுவரை 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் இந்த பணி முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லி, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட எஞ்சிய 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 3-ஆம் கட்ட எஸ்ஐஆர் நடைபெற உள்ளது.

இதன் மூலம் சுமார் 40 கோடி வாக்காளர்களின் வாக்குரிமை ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது.

தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தல்கள் காரணமாக இந்த மூன்றாம் கட்டப் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது தேர்தல் நடைமுறைகள் முடிந்துள்ளதால், இது தொடங்கப்படவுள்ளது.

தேர்தல் ஆணையம் பகிர்ந்துள்ள தகவலின்படி, முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட எஸ்ஐஆர் நடவடிக்கையால் சுமார் 5.18 கோடி பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இது சுமார் சுமார் 10.2% குறைப்பாகும்.

அதிகபட்சமாக உத்தரப் பிரதேசத்தில் 25.47 லட்சம் பெயர்களும், மேற்கு வங்கத்தில் 24.16 லட்சம் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளன.

தங்களுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களைக் குறிவைத்து இந்த நீக்கம் நடைபெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

குறிப்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக வாதிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com