காலை உணவு தரவில்லை என மருமகளை துப்பாக்கியால் சுட்ட மாமனார்

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்க்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

தானே:

மகாராஷ்டிரா தானே பகுதியை சேர்ந்த காசிநாத் பாண்டுரங் பட்டில் என்பவர் தன் மருமகள் காலை உணவு வழங்காததால் துப்பாக்கியை எடுத்து சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றுள்ளது. தேநீர் எடுத்து சென்ற மருமகளை காலை உணவு ஏன் எடுத்துவரவில்லை என கூறி மாமனார் துப்பாகியால் வயிற்றில் சுட்டுள்ளார். இதையடுத்து ரத்த காயங்களுடன் அப்பெண்மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

சுட்டவர் மீது காவல்துறை ஐபிசி பிரிவுகள் 307 (கொலை செய்யும் முயற்சி), 506 (குற்றச்செயல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் துப்பாக்கியை பயன்படுத்தியதற்காகவும் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்க்கு வேறு ஏதாவது காரணங்கள் இருக்கிறதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com