முட்டைகளுக்கும் இனி 'எக்ஸ்பைரி டேட்' - உ.பி. அரசின் புதிய நடவடிக்கை

ஒவ்வொரு முட்டையிலும் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி கட்டாயம் இருக்க வேண்டும் என உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
முட்டைகளுக்கும் இனி 'எக்ஸ்பைரி டேட்' - உ.பி. அரசின் புதிய நடவடிக்கை
Published on

ஏப்.1 முதல் முட்டையில் அதன் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி அச்சிடப்படுவதை கட்டாயமாக்கி உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், கோழிப்பண்ணை உரிமையாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இந்த விதிமுறை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அப்படி இந்த விதிமுறை பின்பற்றப்படவில்லை என்றால், முட்டைகள் அந்த அழிக்கப்படும் என்றும், அல்லது அவை சாப்பிடுவற்கு உகந்ததல்ல என அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேசியுள்ள அதிகாரிகள்,

“நுகர்வோர் முட்டைகளை வாங்கும் போது அவை எவ்வளவு புதியவை என்பதை எளிதாகப் புரிந்துகொள்வதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது அவர்கள் நல்ல முட்டைகளை வாங்கவும், பழைய அல்லது கெட்டுப்போன முட்டைகளை சாப்பிடுவதை தவிர்க்கவும் உதவும்.” என தெரிவித்துள்ளனர்.

முட்டைகளை சுமார் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைக்கும்போது, முட்டையிட்ட தேதியிலிருந்து இரண்டு வாரங்கள் வரை உண்பதற்கு பாதுகாப்பானதாக இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை சரியான குளிர்ச்சியில் வைக்கும்போது 5 வாரங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com